கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

குடி குடியை கெடுக்கும் - நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்




இது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள் ......
ஒரு பெரிய வணிக அங்காடியில்
ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக்
கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்த
பொம்மை வாங்குவதற்கு தேவையான
பணம் இல்லை என்று சொன்னார். அந்த
சிறுவன் இந்த பணம்
போதாதா என்று வினவினான்.
அவர் மீண்டும்
பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம்
குறைவாக உள்ளது என்றார். அந்த
சிறுவன் அந்த
பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.
நான் அந்த சிறுவனிடம் அந்த
பொம்மை யாருக்கு தர போகிறாய்
என்று கேட்டேன். அதற்கு அந்த
சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப
பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள்
அன்று அவளுக்கு பரிசளிக்க
போவதாகவும் கூறினான். மேலும் அவன்
பேச தொடர்ந்தபோது என் இதயம்
நின்று விட்டது போல் உணர்தேன். அவன்
கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என்
தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்
தங்கை கடவுளிடம் சென்று விட்டாள்.
என் அம்மாவும் கடவுளிடம் செல்ல
இருக்கிறார்.
நான் என் தந்தையிடம் இந்த
பொம்மை வாங்கி வரும் வரை அம்மா
கடவுளிடம் செல்ல வேண்டாம்
என்று கூறி விட்டு வந்தேன்.
எனக்கு என் தங்கையும் அம்மாவும்
ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்
செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம்
கேட்டேன், ஆனால் அம்மா கடவுளிடம்
செல்லும் நேரம் வந்துவிட்டதாக
கூறினார்.
மேலும் அவன் கையில் அவனுடைய
புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான்
அதை தன் அம்மாவிடம் கொடுத்தால்
அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள்
தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும்
கூறினான்.
நான் என்னிடம் இருந்த
பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்
வைத்திருந்த பணத்துடன் சேர்த்து,
மீண்டும் எண்ணி பார்க்கலாம்
என்று சொன்னேன். அவனும் இசைந்தான்,
நாங்கள் எண்ணிய போது போதிய
பணத்திற்கு மேல் இருந்தது அவன்
கடவுளுக்கு நன்றி கூறினான்.
நான் கனத்த மனதுடன்
அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில்
படித்தது என் நினைவிற்கு வந்தது,
மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த
அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck)
மோதி விபத்துக்குள்ளானது என்றும்
அதன் ஓட்டுனர்
குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்
வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ
இடத்திலேயே இறந்ததாகவும் தாய்
உயிருக்கு போராடும் நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டார் என்றும் அவர் சயித்திய (coma)
நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த
செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா?
இரண்டு நாள்
கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த
செய்தி விபதுக்குள்ளான பெண்
இறந்து விட்டாள் என்று.
நான்
அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் , கையில் சிறுவனின்
புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த
இதயத்துடன் திரும்பினேன் அந்த
சிறுவனின் தன் அம்மாவிடமும்
தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. ஆனால்
ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம்
ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த
குடும்பம் சிதைந்து விட்டது
தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள்


#முகநூளில் இருந்து எடுக்கப்பட்ட கதை

Comments

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!