Posts

Showing posts from 2016

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

தாழ்வு மனப்பான்மையை போக்கும் மாணிக்க கல்!!!

Image
தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான். கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.  அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.  அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூட்டை  கிழங்கு தருவதாக சொன்னான்.  நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.  மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.  குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு க

பெண்!!!

Image
அன்று அவளுக்கு அலுவலகம் முடிய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நடு ராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மனது ஒரு வித பயத்துடனே இருந்தது. அப்போது சாலை ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதை கண்டு அந்த ஆட்டோவை நோக்கி நடக்க தயாரானாள். அப்போது பின்னால் இருந்து ஒரு சத்தம்... இதயம் ஒரு நொடி நிற்க, திரும்பி பார்த்தால், தன்னுடைய மேனேஜர்! “ஹேய்! என்ன இங்க நிற்கிற! பயப்படாதே நான் உன்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். நீ என்னுடன் பணி புரியும் பெண்... நீ என் பொறுப்பு'' என்று சொல்லி ஆட்டோ எண்ணை குறித்துக்கொண்டு அந்த ஆட்டோவில் அனுப்பி வைத்தார். ஆட்டோ நகர்ந்தது... ஆட்டோ கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்த சாலையில் பயணமானது. ஆட்டோக்காரர் கேட்டார், ''ஏம்மா இவ்வளவு நேரமா வேலை செய்வீங்க'' என்று. ஒரு பதட்டத்தோடு, ''ஆம்...'' என்று சொல்ல இதயத்துடிப்பு அதிகமானது. தான் போக வேண்டிய இடம் நெருங்கியதும், ஆட்டோவை நிறுத்த சொன்னாள். ஆட்டோகாரர் உடனே, ''கொஞ்சம் இரும்மா... பயப்படாதே, அந்த தெரு முனையில் விடுறேன். என் ஆட்டோவில் வருகின்றாய், நீ என் பொறுப்பு''

நெஞ்சே… நீ வாழ்க!

Image
“இந்த பெட்டிய நான்தான் கொண்டு போவன்..” “இல்ல நான்தான்!” “அப்பா எனக்குத்தான் தந்தவர். அம்மாஆ!” பிள்ளைகளின் பிடுங்குப்பாடுதான் அன்று நிர்மலனுக்கு சுப்ரபாதம். புன்னகையோடு புரண்டு படுத்தாலும், அவர்களின் சண்டை எதற்காய் என்று அறிந்து புன்னகைத்தான். ஊருக்குப் போகப் போகிறார்கள். இரவு ஃபிளைட். பிறகென்ன? அவனுக்குள்ளும் அவர்களின் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சுவிஸ் வந்து ஒன்பது வருடங்களாகியிருந்தது. இப்போதுதான் நாட்டையும் சொந்த பந்தங்களையும் பார்க்கப்போகிறான். ஊர் எப்படி இருக்கும்? எல்லோரும் எப்படி இருப்பார்கள்? அவன் படித்த கல்லூரி? நண்பர்கள்? என்று ஓடிய நினைவுகள் தப்பியோட முயல, “அங்க அப்பா படுத்திருக்கிறார்.. கத்தாதிங்கோ..” என்ற மனைவியின் குரல் அதை தடுத்து நிறுத்தியது. உஷா. அவனுடைய அன்புக்கினிய துணைவி. அவனது மனமறிந்து நடந்துகொள்வாள். இன்றுபோல! இனியும் படுத்தால் சரியாக வராது என்று எழுந்து வெளியே சென்றான். ஹாலில் அவர்கள் ஊருக்கு கொண்டுபோகும் பெட்டிகள் தயார் நிலையில் இருந்தன. அதில் இருந்த ஒரு பெட்டிக்குத்தான் அவனது குழந்தைகளுக்குள் சண்டை உருவாகியிருந்தது. தகப்பனைக் கண்டதும் பஞ்சாயத்துக்கு

பழனியை நோக்கி ஓர் பயணம்

Image
விக்னேஸ்வரன் கோயம்பத்தூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இன்னும் இரு தினங்களில் பழனிக்கு சென்று தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு முடி காணிக்கை செலுத்த ஆயத்தமாகி கொண்டிருந்தான். அப்பொழுது அவனை சுற்றி இருந்த அனைவரும் அவனிடம் பழனி பயணம் குறித்து பல்வேறு குறிப்புகளையும், சென்று வரும்போது பழனியிலிருந்து வாங்கி வர வேண்டியவை பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தனர். "வரும்போது சித்தநாதன் கடையிலிருந்து பஞ்சாமிருதம் வாங்கிகிட்டு வா  மச்சா", "சித்தநாதன் கடையிலிருந்து திருநூறு பாக்கெட் வாங்கிகிட்டு வாங்க ஜி", "பழனி கோவில் நல்ல கோவில் தான் ஜி, ஆனால் கோவிலை சுற்றி உள்ளவர்கள் தான் மோசடி காரர்கள்", "பழனியில் கோவிலை தவிர வேறேதும் சிறப்பு இல்ல ஜி, ஊர் கூட சுத்தமாக இருக்காது", "ஆம், நம் அரசாங்கம் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் உள்ள ஊரையும் மேம்படுத்த ஏதவது செய்திருக்கலாம்", "அங்கு உள்ள மோசடி காரர்களை கண்டிக்குமாறு எதாவது செய்திருக்கலாம்", "கோவில் நிர்வாகமாவது எதாவது செய்திருக்கலாம்", "கோவிலை சுற்றியே பா

காகம் கரைந்தால் விருந்தினர் வருவாரா?

Image
அந்த காலத்தில் மாலுமிகள் கடல் பயணம் மேற்கொள்ளும்பொழுது கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்று கண்டுபிடிப்பதற்காக சில காகங்களை தங்களோடு கொண்டு செல்வர். நடுக்கடலில் கப்பல் பயணித்துக்கொண்டிருக்கும் பொழுது கடற்கரைக்கு செல்ல விரும்பினால், கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்று கண்டுபிடிக்க, அவர்கள் தங்களோடு கொண்டுவந்துள்ள சில காகங்களை கட்டவிழ்த்து விடுவார்கள்.. அந்த காகங்கள் எந்த திசையில் பயணிக்கிறதோ, அந்த திசையில் தான் கரை உள்ளது என்று மாலுமிகள் வெகுவாக கணித்துவிடுவார்கள். அதே சமயம் அந்த காகங்கள் ஊருக்குள் கரைந்து கொண்டே சென்று எதாவது ஒரு மரத்திலோ அல்லது வீட்டின் கூரையிலோ அமர்ந்து கரைந்து கொண்டிருக்கும். அதை பார்க்கும் ஊரார் கடலில் இருந்து மாலுமிகள் வரப்போகின்றனர் என்பதை புரிந்து கொண்டு, வருபவர்களை விருந்தாளியாக பாவித்து, வந்ததும்  இளைப்பாற தேவையான வசதிகளை செய்து கொடுப்பர். இச்செயலே பின்னாளில் காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார் என்று சுருக்கமாக சொல்லப்பட்டது. 

Easy way to learn Math table

Image

💪🏼 *பலவீனத்தையும் பலமாக்குவோம்..*💪🏼

Image
🐱உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது. இந்தியா பூனை, பாகிஸ்தான் பூனை, ஜெர்மனி பூனை,ஆஸ்திரேலியா பூனை இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன. அமெரிக்கா பூனையல்லவா? பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழு,கொழுவென இருந்தது. கடைசி சுற்று.... இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம் சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள். பார்வையாளர்களுக்கு வியப்பு! சோமாலியா நாட்டு பூனை நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று, தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது. இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது? பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள். *போட்டி துவங்கியது..* அமெரிக்கா பூனை அலட்சியமாக சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது. சோமாலியா பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கி.... ஒரேஅடி! அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள் ஒரு பல்பு ப்பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது. கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது. பார்வையாளர்கள் அதிர்ச்சியில் வாயடை

அமிலம்...

Image
மணி காலை 5.30. தூக்கமே வரல. இன்னும் மனிதாபிமானமும் இரக்க குணமும் மனுஷங்களுக்கு இருக்கா இல்ல பணத்த தேடி அலையுற வேளைல மத்த மனுஷங்களோட கஷ்டங்களையும் வேதனைகளையும் திரும்பி பாக்க நேரம் இல்லையான்னு தெரியல. ஏதோ டீக்கடைளயும் நியூஸ்பேப்பர்லயும் அப்பப்ப பாக்குற ஒரு விஷயம்,  இவனுங்களுக்கு வேற வேலையே கிடையாதுன்னு அந்த செய்திகள படிக்காம விடற ஒரு விஷயம், முதல் முறையா என் கண்ணு முன்னாடி நடந்துச்சு. முன்தினம் இரவு எட்டு மணி. செம்மொழி உணவகம், அடையார், சென்னை. வணிகர் தினம்னாலோ, மழை பேஞ்சாலோ, தெருல ஏதாவது அரசியல் கட்சி மீட்டிங் நடந்தாலோ எல்லா ஹோட்டலையும் மூடிடுறாங்க. எங்கள மாதிரி பேச்சுலர் பசங்க சோறுக்காக ஹோட்டல் தேடி தேடி அலைய வேண்டியதா போயிடுது. நேத்து நடந்ததும் இதே கதை தான். செம்ம மழை. அப்டின்னுலாம் சொல்ல முடியாது. சென்னைக்கு அது பொருந்தவும் பொருந்தாது. லேசான மழைதான். ஆனா ஊரெல்லாம் தண்ணி. எல்லா சின்ன ஹோட்டலும் மூடிட்டாங்க. நான் எப்பயும் கணக்கு வெச்சு சாப்படற அக்கா ஹோட்டலயும் காணோம். ஹோட்டல்ன்னா தள்ளு வண்டிக்கடை. ஊரெல்லாம் சுத்தி கடைசியா நான் கண்ட ஹோட்டல்தான் இந்த ‘செம்மொழி உணவகம்’

சின்ன தாய் அவள்...

Image
சில நேரத்துல ஏன் அம்மா எதுக்கெடுத்தாலும் பயந்து பயந்து இப்டி கவல பட்டுக்குறாங்கன்னு தோணும். அதுக்கெல்லாம் அனுபவமிக்க அப்பா அழகா ஒரு பதில் வெச்சிருப்பாரு. “அவ வீட்ட விட்டு வெளில எங்கயும் போகாம இருக்கால்ல அதான் டா”ன்னு. அம்மாக்கு கோயில் தெரியும், மார்கெட் தெரியும், தன் புருஷன் தெரியும், என்னைத் தெரியும். இவ்ளோதான் அவங்க. அப்பா Typically அப்பா. ஹி காட் வி.ஆர்.எஸ். அப்புறம் அந்த பணத்துல சென்னைல ஒரு வீடு வாங்கிக்கிட்டு “நாங்களும் உன் கூடவே வந்தடறோம்ப்பா”ன்னு இங்க வந்துட்டாங்க. நான் final year ஸ்டூடென்ட். சில பேர் படிப்புல அந்த அளவு இஷ்டம் இல்லனாக்கூட அம்மா அப்பாக்காக நல்லா படிச்சு நல்ல Rank வாங்குவாங்க இல்லையா? நான் அந்த Type. Placements நடந்துட்டிருந்த சமயம். அம்மா வழக்கத்த விட நெறைய விரதம் இருக்க ஆரம்பிச்சாங்க. எனக்கு சாமி மேல அவ்ளோ இஷ்டம் கெடயாது. அப்பா மாதிரியே. ஆனா அம்மாவோட நம்பிக்கைய மோசம் பண்ணமாட்டோம். உண்மையா ஒத்துக்கணும்ன்னா ஒரு தனிப்பட்ட மனுஷனோட தீர்க்கமான நம்பிக்கைய சிதைக்கிற அளவு எனக்கு ஷக்தி இருந்தாலும் அதுக்கு மாற்று நம்பிக்கை குடுக்க முடிஞ்சா மட்டும்

ஒரு கைதியின் புத்திசாலித்தனம் 😅😅

Image
😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢     புழல் மத்திய சிறையில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர். இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது. 😢  முதல் கைதியின் ஆசை: நல்ல பெண்,நல்ல சாப்பாடு ,நல்ல மது , MGR சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும். என்றான் , அவனது மூன்று ஆசைகளும்,..... நிறைவேற்றப்பட்டன. 😢 இரண்டாவது கைதியின் ஆசைகள் ; நல்ல பெண்,நல்ல உணவு, காமராஜர் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. 😳  மூன்றாவது கைதி : 🍋  தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான். அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதகாலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசை என்ன என்று, கேட்டனர். 🍒  செர்ரிப் பழம் என்று பதில் வந்தது. அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது. 😳  இப்பொழுது ,.... மூன்றாவது , ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போ

ஒரு குட்டி கதை

Image
ஒரு அரசர் இருந்தார் , அவரிடம் 10 காட்டு நாய்கள் இருந்தது. அவர் தவறுகள் செய்த எல்லா அமைச்சர்களையும் சித்திரவதை செய்து சாப்பிட அவற்றை பயன்படுத்தினார். மந்திரிகளில் ஒருவர் ஒரு முறை ஒரு தவறான கருத்து தெரிவித்தார், அது ராஜாவிற்கு  பிடிக்கவில்லை.  அதனால் அவர் அந்த அமைச்சரை அந்த நாய்களிடம்  தள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு அமைச்சர் கூறினார், "நான் 10 ஆண்டுகள் உங்களிடம் பணியாற்றினேன்,  நீங்கள் எனக்கு இதை செய்ய போகிறீர்கள்? நீங்கள் என்னை அந்த நாய்களிடம்  தூக்கி போடும் முன்பாக எனக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுங்கள்! " அரசர் ஒப்புதல் ... முதல் நாள், அமைச்சர், நாய்களை கவனித்து கொண்டிருந்த காவலரிடம்  சென்று, "நான் நாய்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன்" என்று கூறினார். பாதுகாப்பாளர் குழப்பினார், ஆனால் அவர் ஒப்பு கொண்டார். எனவே அமைச்சர், நாய்களுக்கு உணவளித்தல், அவற்றை குளிப்பாட்டுதல், அவர்களை சுத்தம் செய்தல் என்று அவற்றுக்கு அணைத்து பணிவிடைகளும் செய்தார். 10 நாட்கள் முடிவடைந்த போது, ராஜா அவரை தூக்கி அந்த நாய்களிடம் எறியுமாறு பணியாட்களுக்கு உத்தரவிட்டார்.

ஒரு குட்டி கதை

Image
இரு 'நண்பர்கள்' பாலைவனத்தில் பயணம் செய்தனர். வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின. கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள். ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான். அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான். தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான். இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை. பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான். உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான். உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே. பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக்கு கேட்டான் ஏழை. அப்படியானால் நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா? என்று சொல்லி கோபத்தில் ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பணக்காரன். அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினர். வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில், &qu

ஒரு குட்டி கதை

Image
அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார் .ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார் .யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை . முனிவர் அல்லவா ? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு .. ”இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும் ” …  இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர் .வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர் … மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை ). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் …) அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது … ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர் .மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறா

அது முடியாத காரியம்

Image
ஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு . வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு. இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தாங்க. ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி, ” இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது. இது வரைக்கும் யாராலயும் அதை திறக்க முடியலை”. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு. இதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க அவங்களாலயே திறக்க முடியல ! நம்மால எப்பிடி முடியும்னு பாதி பேர் கிளம்பிட்டாங்க. இதை கேட்ட கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு! ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுகிட்டுருந்தாங்க!! இந்த கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது என ராஜா எல்லாரிடமும் கூறினார் . கதவை பார்த்த பலர் எப்படி திறப்பது என்று தயங்கினர் ! ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான். அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு!!! பல பேர் தயங்குவதனாலும், ராஜா சொல்வதனால

தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?

Image
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.  ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” அறிஞர் மிக வருத்தமடைந்தார்.  பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” பையன் சொன்னான்”தங்கம்” அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”. ”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் . உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல

அரசவை விகடகவியாக்குதல்

Image
அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார். இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான். தத்துவஞானியைப் பார்த்து, “ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?” எனக் கேட்டான். அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத்

தெனாலி ராமன் கதைகள்

Image
சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை. சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் “விகடகவி” என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான். காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை “விகடகவி”யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான். அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார். இவர் விகடகவி, குமார பாரதி என்ற பட்டங்கள் பெற்றவர். இவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கதைகளாக வழங்கப்படுகின்றன. அரசவை விகடகவியாக்குதல்

குருவி சொல்லும் வாழ்கை தத்துவம்

Image
ஒருநாள் எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்; ஆஹா,இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான்,(கருடபகவான் என்பது பகவான் விஷ்ணுவை சுமந்து செல்லும் கழுகு. இது கழுத்தில், வெள்ளை நிறமும், உடலில் ப்ரவுன் நிறத்திலும் இருக்கும்) உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குருவியை விழுங்கிவ ிட்டது; குருவியை காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று கருடபகவான் குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது. அப்போது எமதர்மரான கருடபகவானை கூர்ந்து கவனித்தார்.அதற்கு கருடபகவான், “நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கோபத்தில் கத்தியது. இதைக் கேட்ட எமதர்மராஜன் கருடபகவானிடம், “நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்; நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், அந்த குருவி சில நொடிகளில் பல

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!