கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

மருத்துவர் மற்றும் இயந்திர வல்லுநர் இடையே உள்ள ஒற்றுமை...!




இளைஞன் ஒருவன், மெக்கானிக் கடை ஒன்றில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்தான். அன்று, ஒரு காரின் இன்ஜினைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது, அந்த ஊரின் பிரபலமான இதய சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது காரை செப்பனிடுவதற்காக அங்கு வந்தார்.

அவரை அருகில் அழைத்த இளைஞன்,
''பார்த்தீர்களா... இந்த இன்ஜின்தான் காரின் இதயம்.. இந்த உதிரி பாகங்கள் அனைத்தும் வால்வுகள். நானும் உங்களைப் போல ஒவ்வொரு நாளும் இந்த வால்வுகளை இணைத்து ரிப்பேர் செய்கிறேன்.

உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், எனக்குச் சம்பளம் வெறும் இருநூறு ரூபாய். உங்களுக்கோ பல ஆயிரங்கள்'' என்றவன், நீண்டதொரு பெருமூச்சு விட்டுப் பொருமினான்.

அந்த மருத்துவர் ஒரு விநாடிகூடத் தயங்காமல், உண்மைதான். நீயும் அறுவை சிகிச்சை தான் செய்யறே...! ஆனா... கார் ஓடிக்கிட்டிருக்கும் போது செஞ்சு பாரு...!'' என்று கூறி விட்டுச் சென்றார்.

வாழ்வில், உண்பதும் உறங்குவதும் போல ஒப்பிடுவதும் வெகு இயல்பாக ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

வாழ்வில் எல்லாம் இருந்தும், மகிழ்ச்சியின்றிப் பலர் தவிப்பதற்குக் காரணம், பொறாமை எனப்படும் வயிற்றெரிச்சல் தான். வள்ளுவரின் மொழியில் சொல்லவேண்டுமானால், அழுக்காறு...!

பொறாமை அகற்றி மனத்தை தூய்மையாக வைத்திருந்தால், அதுவே "தெய்வம் வாழும் ஆலயமாகும்"...!
படித்ததில் பிடித்தது மட்டுமல்ல...நான் கடைபிடிப்பது கூட...!

Comments

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!