Posts

Showing posts from November, 2016

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

பெண்!!!

Image
அன்று அவளுக்கு அலுவலகம் முடிய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நடு ராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மனது ஒரு வித பயத்துடனே இருந்தது. அப்போது சாலை ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதை கண்டு அந்த ஆட்டோவை நோக்கி நடக்க தயாரானாள். அப்போது பின்னால் இருந்து ஒரு சத்தம்... இதயம் ஒரு நொடி நிற்க, திரும்பி பார்த்தால், தன்னுடைய மேனேஜர்! “ஹேய்! என்ன இங்க நிற்கிற! பயப்படாதே நான் உன்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். நீ என்னுடன் பணி புரியும் பெண்... நீ என் பொறுப்பு'' என்று சொல்லி ஆட்டோ எண்ணை குறித்துக்கொண்டு அந்த ஆட்டோவில் அனுப்பி வைத்தார். ஆட்டோ நகர்ந்தது... ஆட்டோ கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்த சாலையில் பயணமானது. ஆட்டோக்காரர் கேட்டார், ''ஏம்மா இவ்வளவு நேரமா வேலை செய்வீங்க'' என்று. ஒரு பதட்டத்தோடு, ''ஆம்...'' என்று சொல்ல இதயத்துடிப்பு அதிகமானது. தான் போக வேண்டிய இடம் நெருங்கியதும், ஆட்டோவை நிறுத்த சொன்னாள். ஆட்டோகாரர் உடனே, ''கொஞ்சம் இரும்மா... பயப்படாதே, அந்த தெரு முனையில் விடுறேன். என் ஆட்டோவில் வருகின்றாய், நீ என் பொறுப்பு''

நெஞ்சே… நீ வாழ்க!

Image
“இந்த பெட்டிய நான்தான் கொண்டு போவன்..” “இல்ல நான்தான்!” “அப்பா எனக்குத்தான் தந்தவர். அம்மாஆ!” பிள்ளைகளின் பிடுங்குப்பாடுதான் அன்று நிர்மலனுக்கு சுப்ரபாதம். புன்னகையோடு புரண்டு படுத்தாலும், அவர்களின் சண்டை எதற்காய் என்று அறிந்து புன்னகைத்தான். ஊருக்குப் போகப் போகிறார்கள். இரவு ஃபிளைட். பிறகென்ன? அவனுக்குள்ளும் அவர்களின் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சுவிஸ் வந்து ஒன்பது வருடங்களாகியிருந்தது. இப்போதுதான் நாட்டையும் சொந்த பந்தங்களையும் பார்க்கப்போகிறான். ஊர் எப்படி இருக்கும்? எல்லோரும் எப்படி இருப்பார்கள்? அவன் படித்த கல்லூரி? நண்பர்கள்? என்று ஓடிய நினைவுகள் தப்பியோட முயல, “அங்க அப்பா படுத்திருக்கிறார்.. கத்தாதிங்கோ..” என்ற மனைவியின் குரல் அதை தடுத்து நிறுத்தியது. உஷா. அவனுடைய அன்புக்கினிய துணைவி. அவனது மனமறிந்து நடந்துகொள்வாள். இன்றுபோல! இனியும் படுத்தால் சரியாக வராது என்று எழுந்து வெளியே சென்றான். ஹாலில் அவர்கள் ஊருக்கு கொண்டுபோகும் பெட்டிகள் தயார் நிலையில் இருந்தன. அதில் இருந்த ஒரு பெட்டிக்குத்தான் அவனது குழந்தைகளுக்குள் சண்டை உருவாகியிருந்தது. தகப்பனைக் கண்டதும் பஞ்சாயத்துக்கு

பழனியை நோக்கி ஓர் பயணம்

Image
விக்னேஸ்வரன் கோயம்பத்தூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இன்னும் இரு தினங்களில் பழனிக்கு சென்று தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு முடி காணிக்கை செலுத்த ஆயத்தமாகி கொண்டிருந்தான். அப்பொழுது அவனை சுற்றி இருந்த அனைவரும் அவனிடம் பழனி பயணம் குறித்து பல்வேறு குறிப்புகளையும், சென்று வரும்போது பழனியிலிருந்து வாங்கி வர வேண்டியவை பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தனர். "வரும்போது சித்தநாதன் கடையிலிருந்து பஞ்சாமிருதம் வாங்கிகிட்டு வா  மச்சா", "சித்தநாதன் கடையிலிருந்து திருநூறு பாக்கெட் வாங்கிகிட்டு வாங்க ஜி", "பழனி கோவில் நல்ல கோவில் தான் ஜி, ஆனால் கோவிலை சுற்றி உள்ளவர்கள் தான் மோசடி காரர்கள்", "பழனியில் கோவிலை தவிர வேறேதும் சிறப்பு இல்ல ஜி, ஊர் கூட சுத்தமாக இருக்காது", "ஆம், நம் அரசாங்கம் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் உள்ள ஊரையும் மேம்படுத்த ஏதவது செய்திருக்கலாம்", "அங்கு உள்ள மோசடி காரர்களை கண்டிக்குமாறு எதாவது செய்திருக்கலாம்", "கோவில் நிர்வாகமாவது எதாவது செய்திருக்கலாம்", "கோவிலை சுற்றியே பா

காகம் கரைந்தால் விருந்தினர் வருவாரா?

Image
அந்த காலத்தில் மாலுமிகள் கடல் பயணம் மேற்கொள்ளும்பொழுது கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்று கண்டுபிடிப்பதற்காக சில காகங்களை தங்களோடு கொண்டு செல்வர். நடுக்கடலில் கப்பல் பயணித்துக்கொண்டிருக்கும் பொழுது கடற்கரைக்கு செல்ல விரும்பினால், கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்று கண்டுபிடிக்க, அவர்கள் தங்களோடு கொண்டுவந்துள்ள சில காகங்களை கட்டவிழ்த்து விடுவார்கள்.. அந்த காகங்கள் எந்த திசையில் பயணிக்கிறதோ, அந்த திசையில் தான் கரை உள்ளது என்று மாலுமிகள் வெகுவாக கணித்துவிடுவார்கள். அதே சமயம் அந்த காகங்கள் ஊருக்குள் கரைந்து கொண்டே சென்று எதாவது ஒரு மரத்திலோ அல்லது வீட்டின் கூரையிலோ அமர்ந்து கரைந்து கொண்டிருக்கும். அதை பார்க்கும் ஊரார் கடலில் இருந்து மாலுமிகள் வரப்போகின்றனர் என்பதை புரிந்து கொண்டு, வருபவர்களை விருந்தாளியாக பாவித்து, வந்ததும்  இளைப்பாற தேவையான வசதிகளை செய்து கொடுப்பர். இச்செயலே பின்னாளில் காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார் என்று சுருக்கமாக சொல்லப்பட்டது. 

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!